படங்களில் குத்துப் பாடலுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது என்று நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.
தமிழில் கௌதம் இயக்கத்தில் உருவான வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி.
இவர் தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் உருவாகும் பிரகாஷ் ஜா இயக்கத்தில் சக்ரவியூக் என்ற படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் சமீரா.
இதுகுறித்து அவர் கூறுகையில், குத்துப் பாடல்களுக்கு ஆடுவது பெருமையான ஒன்றாக மாறியுள்ளது.
குத்துப்பாடலுக்கு ஆடினார் தனி கெளரவம் கிடைக்கிறது. உரிய அங்கீகாரமும் கிடைக்கிறது என்றார். எனவே குத்துப்பாடல்களுக்கு ஆடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
ஒரு படத்தில் குத்துப் பாடல் இருக்கிறதா என்று மக்களே கேட்கும் அளவுக்கு தற்போது நிலைமை மாறியுள்ளது வரவேற்புக்குரியது.
மேலும் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி குத்துப்பாடல்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறியுள்ளார் சமீரா ரெட்டி.