ad

Pages

அஜித்தின் 53வது படம் வெற்றி கொண்டா


அஜித்தின் 53வது படத்திற்கு வெற்றி கொண்டான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மங்காத்தா 50, பில்லா 51, படங்களின் வெற்றிகளை அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். இப்படத்திற்கான தலைப்பு இன்னும் தெரிவாக வில்லை.

தலைப்பு வைக்காமலேயே இந்தியா முழுவதும் படப்பிடிப்புகளை நடத்திக்கொண்டு படக்குழுவினருடன் ஊர் சுற்றி வருகிறார் இயக்குனர் விஷ்ணு.

இந்நிலையில் 52வது படத்தை விஷ்ணு இயக்க 53வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகின்றார். இப்படத்திற்கான தலைப்பே வெற்றி கொண்டான்.

வெற்றிகொண்டான் படப்பிடிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.



அஜித்தின் இமேஜிற்கு ஏற்றாற்போலவே இந்த தலைப்பு தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட தாண்டவம்




யுடிவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான தாண்டவம் படத்தை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.
இதில் விக்ரம், ஜகபதி பாபு, கோட்டா சீனிவாசராவ், நாசர், சந்தானம், அனுஷ்கா, எமி ஜாக்ஸன், லட்சுமி ராய், சரண்யா, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில், ஊடகத்தினருக்காக தாண்டவம் படம் திரையிடப்பட்டது.
இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகாரிகளான விக்ரம், ஜெகபதி பாபு இருவரும் இணைந்து சர்வதேச பயங்கரவாத சதியை முறியடிக்க ஆக்ஸன் ஆபரேஷனில் இறங்குகிறார்கள்.
மருத்துவரான அனுஷ்காவை மணந்து, அன்பை பொழிந்து காதலிக்கிறார் நாயகன் விக்ரம்.
அதன் பின் லண்டனில் உளவுத்துறை ஆபரேஷனை தொடக்குகிறார். அங்கு வில்லன்களின் பயங்கர சதியில் மனைவி அனுஷ்காவையும், பார்வையையும் இழக்கிறார்.
எக்கோலொக்கேஷன் முறையில் எப்படி சதிகார வில்லன்களை நாயகன் விக்ரம் வேட்டையாடுகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளார்கள்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை காதுகளையே கண்களாக பயன்படுத்தி பார்க்கும் காட்சிகளில் விக்ரம் அசத்தியிருக்கிறார்.
அவருக்குள் ஒளிந்திருக்கும் ஹாலிவுட் நடிகர் திரையில் உலாவருகிறார் என்று சொன்னால் மிகையல்ல. படத்தில் விக்ரமுக்கு பயிற்சி அளிப்பவராக டேனியல் கிஷ் வந்து போகிறார்.
நாயகன் விக்ரமின் மென்மையான காதலை உணர்ந்து, ரொமான்ஸ் நடிப்பை காட்டியிருக்கிறார் அனுஷ்கா.

விக்ரமுக்கு உதவும் கதாபாத்திரங்களில் எமி, லட்சுமி ராய் நடித்துள்ளார்கள். கதைக்களத்துக்கு பொருத்தமான நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு மற்றும் ஜி.வி.பிரகாசின் காதல் மெலடி பாடல்கள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.