ad

Pages

அஜித்தால் வெற்றி நடைபோடும் இங்கிலீஷ் விங்கிலீஷ்


நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்திருக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் தமிழ்நாட்டில் 170 திரையரங்குளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஹிந்திப் பதிப்பை விட தமிழ் பதிப்பு அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் அஜித் எனவும் பேசப்படுகிறது. இப்படத்தில் அஜித் 3 நிமிடங்கள் வரும் பாத்திரமொன்றில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த காட்சி மிகவும் சிறப்பாக அமைந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் அஜித்தை பாராட்டிவருகின்றனர்.

மேலும் சென்னை மற்றும் புற நகரங்களில் டிக்கெட் விற்பனை சூடு பிடித்திருப்பதனால் திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ராகவேந்திரர் கோயிலுக்கு ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை


ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்திராலயத்தில் ஸ்ரீராகவேந்திரர் கோயில் உள்ளது.

இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த், இக்கோயிலுக்கு அடிக்கடி வருவது வழக்கம்.

மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளார்.

இது குறித்து நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நன்கொடை மூலம் மண்டபம் பின்புறமுள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும்.

மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது என்றும் இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

ரஜினிகாந்தின் 100வது படம் ஸ்ரீராகவேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத் தோல்வி: அணித்தலைவர் பதவியிலிருந்து ஜெயவர்த்தன விலகல்


டி20 உலகக் கிண்ணத்தில் மே‌ற்‌கி‌ந்‌‌திய ‌தீவுகள் அணியுடனான படுதோல்வியை அடுத்து டி20 அணியின் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து ஜெயவர்த்தன விலகியுள்ளார்.
நேற்றைய இறுதி போட்டி முடிந்தவுடன் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.





இலங்கை டி20 அணியின் அணித்தலைவர் பதவியை இளைஞர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவுக் குழுவை ஜெயவர்த்தன கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், டி20 அணிக்கு இளம் தலைமை தேவைப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை ஏற்பேன் என்றார்.

அந்தத்தொடருக்கு பின்பு அணித்தலைவர் பதவியில் தொடருவது பற்றி முடிவு எடுப்பேன் என்றும் டி20 ஓவர் அணியில் நான் விளையாட வேண்டும் என்று புதிய அணித்தலைவர் விரும்பினால் விளையாடுவேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஏஞ்சலா மேத்யூஸ் புதிய அணித்தலைவராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் 53வது படம் வெற்றி கொண்டா


அஜித்தின் 53வது படத்திற்கு வெற்றி கொண்டான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மங்காத்தா 50, பில்லா 51, படங்களின் வெற்றிகளை அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். இப்படத்திற்கான தலைப்பு இன்னும் தெரிவாக வில்லை.

தலைப்பு வைக்காமலேயே இந்தியா முழுவதும் படப்பிடிப்புகளை நடத்திக்கொண்டு படக்குழுவினருடன் ஊர் சுற்றி வருகிறார் இயக்குனர் விஷ்ணு.

இந்நிலையில் 52வது படத்தை விஷ்ணு இயக்க 53வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகின்றார். இப்படத்திற்கான தலைப்பே வெற்றி கொண்டான்.

வெற்றிகொண்டான் படப்பிடிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.



அஜித்தின் இமேஜிற்கு ஏற்றாற்போலவே இந்த தலைப்பு தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட தாண்டவம்




யுடிவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான தாண்டவம் படத்தை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.
இதில் விக்ரம், ஜகபதி பாபு, கோட்டா சீனிவாசராவ், நாசர், சந்தானம், அனுஷ்கா, எமி ஜாக்ஸன், லட்சுமி ராய், சரண்யா, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில், ஊடகத்தினருக்காக தாண்டவம் படம் திரையிடப்பட்டது.
இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகாரிகளான விக்ரம், ஜெகபதி பாபு இருவரும் இணைந்து சர்வதேச பயங்கரவாத சதியை முறியடிக்க ஆக்ஸன் ஆபரேஷனில் இறங்குகிறார்கள்.
மருத்துவரான அனுஷ்காவை மணந்து, அன்பை பொழிந்து காதலிக்கிறார் நாயகன் விக்ரம்.
அதன் பின் லண்டனில் உளவுத்துறை ஆபரேஷனை தொடக்குகிறார். அங்கு வில்லன்களின் பயங்கர சதியில் மனைவி அனுஷ்காவையும், பார்வையையும் இழக்கிறார்.
எக்கோலொக்கேஷன் முறையில் எப்படி சதிகார வில்லன்களை நாயகன் விக்ரம் வேட்டையாடுகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளார்கள்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை காதுகளையே கண்களாக பயன்படுத்தி பார்க்கும் காட்சிகளில் விக்ரம் அசத்தியிருக்கிறார்.
அவருக்குள் ஒளிந்திருக்கும் ஹாலிவுட் நடிகர் திரையில் உலாவருகிறார் என்று சொன்னால் மிகையல்ல. படத்தில் விக்ரமுக்கு பயிற்சி அளிப்பவராக டேனியல் கிஷ் வந்து போகிறார்.
நாயகன் விக்ரமின் மென்மையான காதலை உணர்ந்து, ரொமான்ஸ் நடிப்பை காட்டியிருக்கிறார் அனுஷ்கா.

விக்ரமுக்கு உதவும் கதாபாத்திரங்களில் எமி, லட்சுமி ராய் நடித்துள்ளார்கள். கதைக்களத்துக்கு பொருத்தமான நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு மற்றும் ஜி.வி.பிரகாசின் காதல் மெலடி பாடல்கள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.